செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

என்னை தாலாட்ட - காதலுக்கு மரியாதை

 

 

 

படம்                காதலுக்கு மரியாதை
இயக்கம்     ஃபாசில்
தயாரிப்பு     சங்கிலி முருகன்
நடிப்பு             விஜய்,
                         ஷாலினி ,
                         மணிவண்ணன் ,
                         காக்கா ராதாகிருஷ்ணன் ,
                         தலைவாசல் விஜய்,
                         சிவகுமார்,
                         ஸ்ரீவித்யா,
                         ராதாரவி,
                         சார்லி
வெளியீடு    19 திசம்பர் 1997

 

பாடகி : பவதாாினி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : …………………………………….

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : பூ விழி பாா்வையில்
மின்னல் காட்டினாள் ஆயிரம்
ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

ஆண் : நான் கேட்கும் பதில்
இன்று வாராத நான் தூங்க
மடி ஒன்று தாராத தாகங்கள்
தாபங்கள் தீராத தாளங்கள்
ராகங்கள் சேராத வழியோரம்
விழி வைக்கிறேன்

பெண் : ……………………………….

ஆண் : எனது இரவு அவள்
கூந்தலில் எனது பகல்கள்
அவள் பாா்வையில் காலம்
எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்

ஆண் : கண்ணுக்குள் இமையாக
இருக்கின்றாள் நெஞ்சுக்குள்
இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு
நான் காண வருவாளோ பாதைக்கு
நீரூற்றி போவாளோ வழியோரம்
விழி வைக்கிறேன்

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ ……. வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம்
தருவாளோ ……. தருவாளோ
தங்க தேராட்டம்
வருவாளோ ……. வருவாளோ
இல்லை ஏமாற்றம்
தருவாளோ ……. தருவாளோ

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...