திங்கள், 30 ஆகஸ்ட், 2021

இன்னிசை பாடிவரும் - துள்ளாத மனமும் துள்ளும்

 



 

 

இயக்கம்                     எழில்
தயாரிப்பு                   ஆர்.பி.செளத்ரி
இசை                             எஸ். ஏ. இராஜ்குமார்
நடிப்பு                           விஜய், சிம்ரன், மணிவண்ணன்,
ஒளிப்பதிவு                ஆர். செல்வா
படத்தொகுப்பு          வி.ஜெய்சங்கர்
விநியோகம்               சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு                     ஜனவரி 29, 1999

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாி கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : கண் இல்லையென்றாலோ
நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும்
உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம்
தேவையா உணா்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா

ஆண் : கண்ணில் காட்சி
தோன்றிவிட்டால் கற்பனை
தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா
காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : உயிா் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே உயிா்
என்ன பொருள் என்று அலைபாய்ந்து
திாியாதே வாழ்க்கையின் வோ்களோ
மிக ரகசியமானது ரகசியம் காண்பதே
மிக அவசியமானது

ஆண் : தேடல் உள்ள
உயிா்களுக்கே தினமும்
பசியிருக்கும் தேடல் என்பது
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாி கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

விஷ்லிங் : ……………………………………..

 

என்ன அழகு எத்தனை அழகு - லவ் டுடே

 

 

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷிவா

ஆண் : என்ன அழகு
எத்தனை அழகு கோடி
மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

ஆண் : சின்ன அழகு
சித்திரை அழகு சிறு
நெஞ்சை கொத்திய
அழகு இன்று எந்தன்
தோள் சாய்ந்ததே

ஆண் : எந்தன்
உள்ளங்கையில்
அவள் உயிரை
வைத்தாள் ஒரே
சொல்லில் மனசை
தைத்தாள் சுட்டும் விழி
பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில்
விழுந்துவிட்டேன் நீ கரம்
ஒன்று கொடுத்தாய்
எழுந்து விட்டேன்

ஆண் : என்ன அழகு
எத்தனை அழகு கோடி
மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை
சேர்ந்ததே

ஆண் : அன்பே உன்
ஒற்றை பார்வை அதை
தானே யாசிதேன்
கிடையாதென்றால்
கிளியே என் உயிர்
போக யோசித்தேன்

ஆண் : நான்காண்டு
தூக்கம் கெட்டு இன்று
உன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலவும்
அட தீ கூட தித்திதேன்

ஆண் : மாணிக்க
தேரே உன்னை மலர்
கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி
இது நிஜம் தான சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள்
வான் போகுமே

ஆண் : என்ன அழகு
எத்தனை அழகு கோடி
மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை
சேர்ந்ததே

ஆண் : நான் கொண்ட
ஆசை எல்லாம் நான்காண்டு
ஆசைதான் உறங்கும் போதும்
ஒலிக்கும் அடி உன் கொலுசின்
ஓசைதான்

ஆண் : நீ வீசும்
பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம்
தான் வலியின் கொடுமை
ஒழிய அடி தமிழ் வார்த்தை
கொஞ்சம் தான்

ஆண் : இன்றே தான்
பெண்ணே உன் முழு
பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என்
முதல் மோட்சம் நான்
கொண்டேன் மஹா ராணியே
மலர் வாணியே இனி என்
ஆவி உன் ஆவியே

ஆண் : என்ன அழகு
எத்தனை அழகு கோடி
மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

ஆண் : சின்ன அழகு
சித்திரை அழகு சிறு
நெஞ்சை கொத்திய
அழகு இன்று எந்தன்
தோள் சாய்ந்ததே

ஆண் : எந்தன்
உள்ளங்கையில்
அவள் உயிரை
வைத்தாள் ஒரே
சொல்லில் மனசை
தைத்தாள் சுட்டும் விழி
பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில்
விழுந்துவிட்டேன் நீ கரம்
ஒன்று கொடுத்தாய்
எழுந்து விட்டேன்

ஆண் : என்ன அழகு
எத்தனை அழகு கோடி
மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை
சேர்ந்ததே

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...