புதன், 1 செப்டம்பர், 2021

Manase Manase... - Nejinile



பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : ………………………………

பெண் : மனசே மனசே………..

பெண் : { மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க } (2)

ஆண் : பூக்கள் மீது பனி
துடைத்து கவிதைகள்
எழுதிவிடு

பெண் : காதல் கடிதம்
நீ கொடுத்து நிலவினை
தூது விடு

ஆண் : மனசே மனசே…

பெண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

பெண் : ………………………………

ஆண் : நீ தினம் தினம்
சுவாசிக்க தானே காற்றில்
தென்றலாய் நானும் ஆகவா

பெண் : நீ என்னை தினம்
வாசிக்க தானே உந்தன்
கையில் நான் வீணை ஆகவா

ஆண் : மழை இல்லை
நனைகிறேன் நம் காதலின்
சாரலா

பெண் : உன்னை கண்டு
உறைகிறேன் உன் பார்வை
மின்சாரமா

ஆண் : என்னை தந்தேன்
உன்னை கொடு
மனசே மனசே

பெண் : { மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க } (2)

பெண் : ………………………………

பெண் : உன் கனவிலே
நான் வர தானே தினமும்
இரவிலே விழித்திருப்பேனே

ஆண் : உன் மனதிலே
குடிவர தானே உனது
விழியிலே நீந்திடுவேனே

பெண் : ஒரே முறை
நிழல் தொடு என் பிம்பம்
நீயாகுமே

ஆண் : ஒரே ஒரு வரம்
கொடு உன்னோடு நான்
வாழவே

பெண் : சுகம் தரும்
கடல் இதோ

ஆண் : மனசே பெண் : மனசே…

ஆண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

பெண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

ஆண் : பூக்கள் மீது பனி
துடைத்து கவிதைகள்
எழுதிவிடு

பெண் : காதல் கடிதம்
நீ கொடுத்து நிலவினை
தூது விடு

ஆண் : மனசே பெண் : மனசே…

பெண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

Poove Poove - Once More

 

 

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஆஆ ஆஹா
ஆ ஹா ஆ ஹா
……………………….

ஆண் : பூவே பூவே
பெண் பூவே என்
பூஜைக்கு வரவேண்டும்

ஆண் : பூவே பூவே
பெண் பூவே என்
பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த
வேண்டும் நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன
மன இல்லையே

பெண் : பூவே பூவே
பெண் பூவே உன்
பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த
வேண்டும் நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன
மன இல்லையே

ஆண் : பூவே பூவே
பெண் பூவே

குழு : ………………………

ஆண் : காதலின் வயது
அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம் நாம்
வாழனும் வாடி

பெண் : ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால் உயிரும்
அற்று போகும் பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட கோடி
வருஷமாகும்

ஆண் : காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே

பெண் : பூவே பூவே
பெண் பூவே

பெண் : பூமியை தழுவும்
வேர்களை போலே உன்
உடல் தழுவி நான் வாழ்ந்திட
வந்தேன்

ஆண் : ஆண்டு நூறு
நீயும் நானும் சேர்ந்து
வாழ வேண்டும் மாண்டு
போன கவிகள் நம்மை
மீண்டும் பாட வேண்டும்

பெண் : காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே

ஆண் : பூவே பூவே
பெண் பூவே என்
பூஜைக்கு வரவேண்டும்
பெண் : நம் காதல் வாழ
வேண்டும் நம்மை காற்றும்
வாழ்த்தவேண்டும்
ஆண் : நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்

ஆண் & பெண் : காதலுக்கு
என்றும் ஜன கன மன
இல்லையே பூவே பூவே
பெண் பூவே

O Thendrale Video Song - Endrendrum Kadhal

 

 

 

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்

குழு : தந்தானே தந்தானே தந்தா
தந்தானே தந்தானே தந்தா
தந்தானே தந்தானே தந்தா

ஆண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா

ஆண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நலங்கள் சொல்லும்

ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே

ஆண் : முதல் காதல் முதல் முத்தம்
ரெண்டும் மறக்குமா
ஹோ முதல் காதல் பூமுத்தம்
ரெண்டும் மறக்குமா

ஆண் : நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்
வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம்
நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
தழுவிக்கொள்ளு

ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே

ஆண் : கிளிகள் காணும் நேரத்தில்
மீனாட்சி ஞாபகம்
ஹா கிளிகள் காணும் நேரத்தில்
மீனாட்சி ஞாபகம்

ஆண் : நிலவில் நானும் பார்க்கின்றேன்
நினைவில் ஆடும் பூமுகம்
தாய்மையின் சாயலை
உன்னிடம் பார்க்கிறேன்
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
எடுத்துசொல்லு

பெண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
காதல் நெஞ்சின் ஆசையெல்லாம்
உன்னோடு பேசவா

பெண் : ஓ தென்றலே ஹோ தென்றலே
ஹோ தென்றலே

குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்….
ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்….ம்ம்ம்

நீ காற்று நான் மரம் - நிலவே வா

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் :  நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்

ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

பெண் : ………………………

பெண் : நீ அலை
நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

ஆண் : நீ உடல் நான்
நிழல் நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்

பெண் : நீ கிளை நான்
இலை உன்னை ஒட்டும்
வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

ஆண் : நீ விழி நான்
இமை உன்னை சேரும்
வரைக்கும் நான் துடித்து
இருப்பேன்

பெண் : நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்

ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண் : ………………………

ஆண் : நீ வானம் நான்
நீலம் உன்னில் நானாய்
கலந்திருப்பேன்

பெண் : நீ எண்ணம்
நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்

ஆண் : நீ வெயில்
நான் குயில் உன்
வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்

பெண் : நீ உடை நான்
இடை உன்னை உறங்கும்
பொழுதும் நான் உடுத்திருப்பேன்

ஆண் : நீ பகல் நான்
ஒளி என்றும் உன்னை
மட்டும் சார்ந்தே நான்
இருப்பேன்

பெண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்

பெண் : நீ இரவு நான்
விண்மீன் நீ இருக்கும்
வரை தான் நான் இருப்பேன்

ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஏன் பெண்ணென்று - லவ் டுடே

 

 

லவ் டுடே

இயக்கம்பாலசேகரன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைபாலசேகரன்
விஜய்
சுவலட்சுமி
மந்திரா
ரகுவரன்
ஒளிப்பதிவுவிஜய் கோபால்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிளிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிளிம்ஸ்
வெளியீடு9 மே 1997[1]

 

 

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சிவா

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்

ஆண் : முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்

ஆண் : நீ சூடும் ஒரு பூ
தந்தால் என் ஆஸ்தி
எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர்
சொன்னால் உன் காலடியில்
கிடப்பேன்

ஆண் : தூக்கத்தை
தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்

ஆண் : தலை போன
சேவல் போல் தவிக்குது
அங்கம் இரண்டில் ஒன்று
சொல்லிவிடு இல்லை நீயே
கொள்ளியிடு

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்

ஆண் : நோகாமல்
பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி
தொடுவேன் என்ன
ஆனாலும் உயிர்
போனாலும் ஒரு
தென்றல் என்றே
வருவேன்

ஆண் : நீ என்னைப்
பார்த்தால் தான்
துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ
உள்ளம் வெறும் பள்ளம்

ஆண் : இமயம் கேட்கும்
என் துடிப்பு ஏனோ உனக்குள்
கதவடைப்பு

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்

ஆண் : முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...