செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஒரு தடவை சொல்வாயா - வசீகரா

 

 

 

படம்                                         வசீகரா
இயக்கம்                                கே. செல்வபாரதி
தயாரிப்பு                              சாட்சு என் ஸ்டில்ஸ் லிமிடெட்
இசை                                       எஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு                                     விஜய்
                                                   ஸ்னேகா
                                                   மணிவண்ணன்
படத்தொகுப்பு                    என். கணேஷ் குமார்
                                                   ஆர். ஆர். ஈஸ்வர்
தொகுப்பு மேற்பார்வை:-வி. டி. விஜயன்
விநியோகம்                          சத்தியா மூவிசு
வெளியீடு                               சனவரி 15, 2003

 

பாடகி : சின்மயி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

பெண் : ஒரு தடவை
சொல்வாயா உன்னை
எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை
போல மறைத்து வைத்தால்
தொிந்து விடும் காதலில் தான்
பூக்கள் மோதி மலைகள் கூட
உடைந்து விடும் உன்னை
ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

ஆண் : நதியில் தொியும்
நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும்
வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை

பெண் : உனக்கும் எனக்கும்
விழுந்த முடிச்சு தானாய்
விழுந்ததில்லை உலக
உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை

ஆண் : மின்மினி தேசத்து
சொந்தக்காரன் விண்மீன்
கேட்பது தவறாகும்

பெண் : வரலாற்றில் வாழ்கின்ற
காதல் எல்லாம் வலியோடு
போராடும் காதல் தானே

பெண் : ஒரு தடவை
சொல்வாயா உன்னை
எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஆண் : நெருங்க நினைக்கும்
நினைவை மறக்க நெஞ்சம்
நினைக்கிறது கனவில் பூக்கும்
பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

பெண் : கிளையை முறித்து
போட்டு விடலாம் வேரை
என்ன செய்வாய் தரையை
உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்

ஆண் : மல்லிகை பூக்கள்
உதிா்வதெல்லாம் மரத்தடி
நிழலுக்கு சொந்தமில்லை

பெண் : உன்னோடு நான்
வாழ போராடுவேன் நீ இன்றி
போனாலும் தள்ளாடுவேன்

பெண் : ஒரு தடவை
சொல்வாயா உன்னை
எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை
போல மறைத்து வைத்தால்
தொிந்து விடும் காதலில் தான்
பூக்கள் மோதி மலைகள் கூட
உடைந்து விடும் உன்னை
ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...