செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

பாரதிக்கு கண்ணம்மா - பிரியமுடன்

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

பெண் : ……………………

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே

ஆண் : ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

பெண் : ……………………

ஆண் : அய்யய்யோ தீயை
எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை
வாங்கித் தந்தாளே

பெண் : ……………………

ஆண் : ஹே கல்லைத்தான்
தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட
உள்ளம் திறக்கும் அவள்
பெயரைக்கேட்டு வந்தால்
என் உயிரின் பாதி தருவேன்

ஆண் : அவள் உயிரைக்கேட்டு
வந்தால் என் உயிரின் மீதி
தருவேன் வீசுகின்ற காற்றே
நீ நில்லு வெண்ணிலாவின்
காதில் போய் சொல்லு

ஆண் : { பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா } (2)

பெண் : ……………………

ஆண் : { பூட்டுக்கும் பூட்டைப்
போட்டு மனதை வைத்தேனே } (2)
காட்டுக்குள் பாதைப் போடும்
காற்றாய் வந்தாயே

பெண் : ……………………
ஆண் : ……………………

ஆண் : உன்னோடு உலகம்
சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு
உயிலும் எழுதட்டுமா நான்
பறவையாகும் போது உன்
விழிகள் அங்கு சிறகு

ஆண் : நான் மீன்களாகும்
போது உன் விழிகள் கங்கை
ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே

ஆண் : ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

ஆண் : ……………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...