திங்கள், 30 ஆகஸ்ட், 2021

இன்னிசை பாடிவரும் - துள்ளாத மனமும் துள்ளும்

 



 

 

இயக்கம்                     எழில்
தயாரிப்பு                   ஆர்.பி.செளத்ரி
இசை                             எஸ். ஏ. இராஜ்குமார்
நடிப்பு                           விஜய், சிம்ரன், மணிவண்ணன்,
ஒளிப்பதிவு                ஆர். செல்வா
படத்தொகுப்பு          வி.ஜெய்சங்கர்
விநியோகம்               சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு                     ஜனவரி 29, 1999

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாி கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : கண் இல்லையென்றாலோ
நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும்
உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம்
தேவையா உணா்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா

ஆண் : கண்ணில் காட்சி
தோன்றிவிட்டால் கற்பனை
தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா
காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : உயிா் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே உயிா்
என்ன பொருள் என்று அலைபாய்ந்து
திாியாதே வாழ்க்கையின் வோ்களோ
மிக ரகசியமானது ரகசியம் காண்பதே
மிக அவசியமானது

ஆண் : தேடல் உள்ள
உயிா்களுக்கே தினமும்
பசியிருக்கும் தேடல் என்பது
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாி கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

விஷ்லிங் : ……………………………………..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...